ஆன்மிகம்
விநாயகர்

பிரளயம் காத்த விநாயகர் கோவிலில் சுவாமிக்கு விடிய விடிய தேனபிஷேகம்

Published On 2021-09-11 08:46 GMT   |   Update On 2021-09-11 08:46 GMT
தேன் அபிஷேகம் ஆரம்பிக்கப்பட்டு விடிய, விடிய விநாயகருக்கு நடைபெற்றது. இதில் கடல் நுரையால் ஆன விநாயகர் சிலை செம்பவள மேனியாய் காட்சியளித்தது.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்த சுவாமிமலை அருகே உள்ள திருப்புறம்பியம் பிரளயம் காத்த விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விடிய விடிய தேன் அபிஷேகம் நடப்பது வழக்கம். இதனை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இந்த ஆண்டு கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழக அரசு வாரம்தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்கள் கோவில் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நேற்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்ற காரணத்தால், சிறப்பாக நடைபெறும் விநாயகர் சதுர்த்தி அன்று, காலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் கோவில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு கோவில் வளாகத்தின் உள்ளேயே நடைபெற்றது.

தொடர்ந்து தேன் அபிஷேகம் ஆரம்பிக்கப்பட்டு விடிய, விடிய விநாயகருக்கு நடைபெற்றது. இதில் கடல் நுரையால் ஆன விநாயகர் சிலை செம்பவள மேனியாய் காட்சியளித்தது.

Tags:    

Similar News