ஆன்மிகம்
திருமலையில் ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம்

திருமலையில் ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம்

Published On 2021-08-13 02:46 GMT   |   Update On 2021-08-13 02:46 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் நடந்தது. இதையடுத்து உற்சவர்கள் நான்கு மாடவீதிகள் வழியாக கோவிலுக்குள் கொண்டு வந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் நடந்தது. அன்று மாலை கோவிலில் சகஸ்ர தீபலங்கார சேவை முடிந்ததும், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமியை கோவிலில் இருந்து தங்கத் திருச்சி வாகனத்தில் திருமலையில் உள்ள புரசைவாரி தோட்டத்துக்குக் கொண்டு வந்தனர்.

அங்கு, உற்சவா்களுக்கு நிவேதனம் நடந்தது. பின்னர் பகட மரத்துக்கு சேஷஆரத்தி காண்பிக்கப்பட்டது. சடாரிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து உற்சவர்கள் நான்கு மாடவீதிகள் வழியாக கோவிலுக்குள் கொண்டு வந்தனர்.

விழாவில் கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு, அதிகாரி டாலர் சேஷாத்ரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News