ஆட்டோமொபைல்
எம்ஜி சைபர்ஸ்டெர் கான்செப்ட்

எம்ஜி சைபர்ஸ்டெர் கான்செப்ட் படங்கள் வெளியீடு

Published On 2021-04-05 07:38 GMT   |   Update On 2021-04-05 07:38 GMT
எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்ட் படங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.


எம்ஜி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் மாடலான சைபர்ஸ்டெர் கான்செப்ட் படங்களை வெளியிட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் இம்மாதம் நடைபெற இருக்கும் ஷாங்காய் ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் நிச்சயம் உற்பத்தி செய்யப்படும். 

காரின் முன்புறம் ஏரோடைனமிக் டிசைன், பக்கவாட்டு மற்றும் டெயில் லேம்ப் உள்ளிட்டவைகளை பார்க்கும் போது இந்த மாடல் அதிவேக எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக இருக்கும் என தெரிகிறது. இது சர்வதேச சந்தையில் ஸ்போர்ட்ஸ் கார் பிரியர்களை கவரும் வகையிலான தோற்றம் கொண்டுள்ளது.



இது கேமிங் காக்பிட் கொண்ட உலகின் முதல் முழுமையான சூப்பர் கார் ஆகும். எம்ஜி குளோபல் டிசைன் குழுவினர் இந்த காரை வடிவமைத்து இருக்கின்றனர். இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 800 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும். 

இந்த கார் முழுமையான எலெக்ட்ரிக் திறன், 5ஜி இணைப்பு வசதி கொண்டிருக்கும் என்றும் இது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3 நொடிகளில் எட்டிவிடும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News