செய்திகள்
மோசடி

பங்கு சந்தையில் முதலீடு செய்த தொழில் அதிபரிடம் ரூ.20லட்சம் மோசடி

Published On 2019-10-18 14:26 GMT   |   Update On 2019-10-18 14:26 GMT
பங்கு சந்தையில் முதலீடு செய்த புதுவை தொழில் அதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:

புதுவை கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் கணேஷ். தொழில் அதிபர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரும்பார்த்த புரத்தில்   செயல்படும் ஒரு தனியார் நிறுவனம் மூலம் பங்கு சந்தையில் ரூ.20 லட்சம் முதலீடு செய்தார். ஆனால் லாப தொகையை அந்த நிறுவனம் கணேசனின் வங்கி கணக்கில் செலுத்தவில்லை. 

அதேவேளையில் அந்த நிறுவனம் கணேசனுக்கு ரூ.10 லட்சம் வரை லாபம் கிடைத்தள்ளதாக தகவல் இருந்தது. இதகுறித்து அந்த நிறுவனத்தின் புதுவை கிளை மேலாளர் சுரேசிடம் கேட்டபோது பங்கு சந்தையில் விலை வீழ்ச்சியினால் லாபம் கிடைக்கவில்லை தொடர்ந்து நஷ்டமே ஏற்பட்டு வருவதாக தெரிவித்தார்.

சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மானேஜர் ஹரிகரனிடம் கேட்டபோது  அவரும் இந்த தகவலை தெரிவித்தார். இதையடுத்து முதலீடு செய்த பணத்தை திருப்பி கேட்டபோது நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக கூறி ரூ.10 லட்சம் மட்டும் கணேசனிடம் அவர்கள் கொடுத்தனர். 

இதில் ரூ. 20 லட்சம் வரை மோசடி  நடந்ததை அறிந்த கணேஷ் இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் ஆகியோர் விசாரணை நடத்தி பணம் மோசடி செய்த புதுவை கிளை மேலாளர் சுரேஷ், சென்னை தலைமை அலுவலக மேலாளர் ஹரிகரன் மற்றும் ஊழியர்கள் சீனுவாசன், விக்ரம் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News