ஆன்மிகம்
திருநாகேஸ்வரம்

ராகுவால் ஏற்படும் தோஷம் போக்கும் ஸ்தலம்

Published On 2020-08-25 06:20 GMT   |   Update On 2020-08-25 06:20 GMT
கால சர்ப்பதோஷம், ராகு திசை, ராகு புத்தி, நாக தோஷம் அமைந்தவர்கள் திருநாகேஸ்வரம் கோவிலில் உள்ள ராகு பகவானைத் துதித்து அந்த தோஷங்களில் இருந்து விடுபடலாம்.
ராகு பகவானிற்கு உரிய சிறப்பு தலம் திருநாகேஸ்வரம். இந்த திருத்தலம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து வடகிழக்கே சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்தில் (கும்பகோணம்- காரைக்கால் சாலையில்) உள்ளது.

கால சர்ப்பதோஷம், ராகு திசை, ராகு புத்தி, நாக தோஷம் அமைந்தவர்கள் இங்குள்ள ராகு பகவானைத் துதித்து அந்த தோஷங்களில் இருந்து விடுபடலாம். ஐந்து தலை அரவமாகிய (நாக ராஜாவாக) ராகு பகவான் சன்னிதி கோவிலின் இரண்டாவது பிரகாரத்தில் உள்ளது. உதட்டோர புன்னகை, மடித்த கால் தொடையில் இடது கரத்தை ஊன்றி வலக்கரத்தால் அருள்பாலிக்கின்றார்.

இங்கு வீற்றிருக்கும் ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்யும் பொழுது, பால் அவருடைய திருமேனியில் பட்டு வழியும் வேளையில் நீலநிறமாக மாறிவிடும் அதிசயம் இன்று வரை நடந்து வருகிறது.

1980-ம் ஆண்டு ராகு பகவானின் மீது கிடந்த, நாகம் கழற்றிய சட்டை, கோவில் கண்ணாடி பேழையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ‘ராகுவைப் போல கொடுப்பானுமில்லை’ என்பது பழமொழி. எனவே கொடுக்கும் ராகுவை வழிபட்டால் அடுக்கடுக்காக நற்பலன்கள் வந்து சேரும். 
Tags:    

Similar News