செய்திகள்
கருப்பு தீபாவளி தினமான அனுசரிக்க கோரி நோட்டீஸ் ஒட்டிய விவசாயிகள்

இது கருப்பு தீபாவளி... வீடு வீடாக சென்று போராட்டத்திற்கு ஆதரவு திரட்டிய பஞ்சாப் விவசாயிகள்

Published On 2020-11-13 03:04 GMT   |   Update On 2020-11-13 03:04 GMT
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படுகிறது.
அமிர்தசரஸ்:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி சார்பில் தொடர்ந்து நடைபெறும் இப்போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 

ரெயில் மறியல், ஆர்ப்பாட்டம், பேரணி என தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்து வந்த விவசாயிகள் தற்போது தீபாவளி பண்டிகையை கருப்பு தினமான அனுசரித்து போராடுகின்றனர். 

மேலும், தீபாவளியை கருப்பு தினமாக அனுசரிக்கும்படி  பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். அமிர்தசரசில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து, ஆதரவு திரட்டினர். கருப்பு தினமாக அனுசரிக்கும்படி வீடு வீடாக சென்று நோட்டீஸ் ஒட்டினர்.
Tags:    

Similar News