செய்திகள்
பாகிஸ்தான் சூப்பர் லீக்

பாகிஸ்தான் சூப்பர் லீக்: மீதமுள்ள போட்டிகள் ஜூன் 9 முதல் 24-ந்தேதி வரை நடக்கிறது

Published On 2021-06-04 03:59 GMT   |   Update On 2021-06-04 03:59 GMT
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் பிப்ரவரி- மார்ச் மாதங்களில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. கொரோனா தொற்று தாக்கம் இருந்த நிலையில் 2021 சீசன் ரசிகர்கள் இன்றி நடைபெற்று வந்தது.

பயோ-பபுள் தோல்வியடைந்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தொடர் உடனடியாக ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தீர்மானித்தது. இதனால் அமீரக அரசிடமும், கிரிக்கெட் போர்டிடமும் அனுமதி கேட்டது. அவர்களும் அனுமதி கொடுத்தனர்.

வீரர்களுக்கான பயணம், தனிமைப்படுத்துதல், ஓட்டல்கள் ஏற்பாடு செய்தல் போன்ற பணிகளை செய்து முடித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு. இந்த நிலையில் வருகிற 9-ந்தேதி முதல் ஜூன் 24-ந்தேதி வரை மீதமுள்ள போட்டிகள்  நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News