தொழில்நுட்பம்
ஏர்டெல்

அந்த விஷயத்தில் ஜியோவை முந்திய ஏர்டெல்

Published On 2020-11-12 06:45 GMT   |   Update On 2020-11-12 06:45 GMT
இந்திய டெலிகாம் சந்தையில் அந்த விஷயத்தில் ரிலையன்ஸ் ஜியோவை ஏர்டெல் நிறுவனம் முந்தி இருக்கிறது.
 

இந்திய டெலிகாம் சந்தையில் 2020 ஆகஸ்ட் மாத வாக்கில் ரிலையன்ஸ் ஜியோவை விட ஏர்டெல் நிறுவனம் பத்து லட்சம் வாடிக்கையாளர்களை அதிகமாக சேர்த்து இருக்கிறது. இந்த தகவலை மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் 28.99 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது. ஜியோ நிறுவனம் 18.64 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்தது. வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் 12.28 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது.



சந்தாதாரர்கள் அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் 35.08 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. ஏர்டெல் நிறுவனம் 28.12 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது.

ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்திய சந்தையின் வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 114.18 கோடிகளாக இருக்கிறது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது 0.33 சதவீதம் அதிகம் ஆகும்.
Tags:    

Similar News