தொழில்நுட்பம்
சியோமி எம்ஐ 10ஐ 5ஜி

விற்பனையில் ரூ. 400 கோடிகளை குவித்த சியோமி ஸ்மார்ட்போன்

Published On 2021-02-03 06:56 GMT   |   Update On 2021-02-03 06:56 GMT
சியோமி நிறுவனத்தின் எம்ஐ 10ஐ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய குறுகிய காலக்கட்டத்தில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.


சியோமி நிறுவனத்தின் எம்ஐ 10ஐ 5ஜி சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனையின் மதிப்பு ரூ. 400 கோடிகளை கடந்து இருப்பதாக சியோமி இந்தியா தெரிவித்து உள்ளது. இந்தியாவில் எம்ஐ 10ஐ 5ஜி விற்பனை ஜனவரி 7 ஆம் தேதி துவங்கியது குறிப்பிடத்தக்கது. 

விற்பனை மட்டுமின்றி கூகுளில் 2021 ஜனவரி மாதத்தில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்களில் எம்ஐ 10ஐ 5ஜி இடம்பெற்று இருப்பதாக சியோமி இந்தியா தெரிவித்து இருக்கிறது. வெளியான சில வாரங்களில் அமேசான் தளத்தில் அதிகம் விற்பனையான சாதனங்கள் பட்டியலிலும் எம்ஐ 10ஐ 5ஜி இடம்பிடித்தது.

இந்தியாவில் கிடைக்கும் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக எம்ஐ 10ஐ 5ஜி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 108 எம்பி பிரைமரி கேமரா கொண்ட குறைந்த விலை மாடலாக வெளியானது. 



சியோமி எம்ஐ 10ஐ சிறப்பம்சங்கள்

- 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்
- அட்ரினோ 619 GPU
- 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி மெமரி
- 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 108 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, f/1.75, LED பிளாஷ்
- 8 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார்
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 16 எம்பி செல்பி கேமரா, f/2.45
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ரெஸ் ஆடியோ
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP53)
- 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப் சி
- 4820 எம்ஏஹெச் பேட்டரி
- 33வாட் பாஸ்ட் சார்ஜிங்

Tags:    

Similar News