வழிபாடு
சந்திரகிரி கோதண்டராமசுவாமி கோவில் ஆண்டு பிரம்மோற்சவ போஸ்டர் வெளியீடு

சந்திரகிரி கோதண்டராமசுவாமி கோவில் ஆண்டு பிரம்மோற்சவ போஸ்டர் வெளியீடு

Published On 2022-03-30 08:03 GMT   |   Update On 2022-03-30 08:03 GMT
சந்திரகிரி கோதண்டராம சுவாமி கோவிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் ஏப்ரல் மாதம் 10-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக 10-ந் தேதி ராமநவமி கொண்டாடப்படுகிறது.
சந்திரகிரி கோதண்டராம சுவாமி கோவிலின் வருடாந்திர பிரம்மோற்சவ போஸ்டர் வெளியிடும் நிகழ்ச்சி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது கோதண்டராமர் பிரம்மோற்சவம் ஏப்ரல் மாதம் 10-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடைபெறும். இதன் ஒரு பகுதியாக 10-ந் தேதி ராமநவமி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை 7 மணி முதல் 7.45 மணி வரை கொடியேற்றம் நடைபெறும். 9-ந் தேதி மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம் பிரம்மோற்சவம் தொடங்குகிறது.

முன்னதாக 2-ந் உகாதி ஆஸ்தானம், 5-ந் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனமும் நடைபெறுகிறது. 14-ந் தேதி மாலை 5 மணி முதல் 7.45 மணி வரை கோதண்ட ராமசுவாமி அனுமன் வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 16-ந் தேதி மாலை 6 மணி முதல் 7.30 வரை கருடவாகனம் நடைபெறும்.

18-ந் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் சுவாமி, தாயார் உற்சவர், சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனமும், காலை 10 மணி முதல் 10.30 மணி வரை சக்கர ஸ்ஞானம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு விழா நிறைவடைகிறது.

19-ந் தேதி மாலை 5.45 மணி முதல் 7 மணி வரை ராமர் பட்டாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக 16-ந் தேதி காலை 10 மணி முதல் 11.30 மணி வரை கல்யாண உற்சவம் நடக்கிறது.
Tags:    

Similar News