செய்திகள்
சிறுத்தை

ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கொன்று விருந்து வைத்த கிராம மக்கள்

Published On 2020-01-11 10:03 GMT   |   Update On 2020-01-11 10:03 GMT
அசாம் மாநிலம் திலிபரி கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தையை அடித்துக்கொன்ற கிராம மக்கள், சமைத்து விருந்து படைத்துள்ள சம்பவத்திற்கு வன ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கவுகாத்தி:

அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள திலிபரி கிராமத்திற்குள் சிறுத்தை ஒன்று வனப்பகுதியில் இருந்து வழிதவறி ஊருக்குள் புகுந்தது.

இந்த சிறுத்தை ஏற்கனவே அந்த கிராமத்தை சேர்ந்த 3 பேரை தாக்கி இருந்தது. அடிக்கடி கிராமத்துக்குள் புகும் சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள்விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கூறியும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் ஆவேசமடைந்தனர்.

இந்நிலையில் சிறுத்தை மீண்டும் ஊருக்குள் புகுந்ததால் ஆவேசமடைந்த கிராம மக்கள் சிறுத்தையை பிடித்து அடித்துக்கொன்றனர்.

மேலும், அந்த சிறுத்தையின் உடலை துண்டு, துண்டாக வெட்டி கிராம மக்கள் சமைத்து விருந்து படைத்துள்ளனர். இதனை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.

இந்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியதால் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுத்தையை அடித்து கொன்றதற்கு வன ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து இதுவரை அசாமில் மட்டும் 200 சிறுத்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

வழி தவறி ஊருக்குள் புகும் விலங்குகள் மீது பொதுமக்கள் கற்களை வீசி தாக்குவதாலும் பலியாவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News