செய்திகள்
திருச்சுழி அருகே விடத்தக்குளம் கிராமத்தில் குலை நோய் தாக்கிய நெற்பயிர்கள்.

திருச்சுழி அருகே நெற்பயிரில் குலை நோய் தாக்குதல் - விவசாயிகள் கவலை

Published On 2021-01-11 13:36 GMT   |   Update On 2021-01-11 13:36 GMT
திருக்சுழி அருகே நெற்பயிரில் குலை நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
காரியாபட்டி:

திருச்சுழி அருகே விடத்தகுளம், வி.புதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது வயல்களில் 250 ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளனர்.

இந்தநிலையில் விடத்தகுளம் பகுதியில் சுமார் 150 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ள விளைந்த நெற்பயிர்களில் குலைநோய் தாக்குதலால் 70 சதவீதம் பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இந்தநோய் தாக்கிய நெற்பயிர்கள் மஞ்சள் பூத்த நிலையில் காணப்படுகிறது. கடன் வாங்கி சாகுபடி செய்தும், தற்போது எந்த பலனும் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படும் சூழ்நிலை உள்ளது.

குலை நோயால் பாதிப்பினால் மாடுகளுக்கு வைக்கோலுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News