செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள்.

கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2021-09-14 08:56 GMT   |   Update On 2021-09-14 08:56 GMT
தொலைபேசி நிலையம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்;

இதில் பொதுத்துறைகளின் தனியார்மயத்தை நிறுத்திட வேண்டும். ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளன்று அந்தந்த மாத ஊதியம் வழங்க வேண்டும். 3-வது ஊதிய மாற்றத்தை உடனே இறுதிப்படுத்த வேண்டும்.  

15 சதவீதம் நிர்ணய பலனோடு ஓய்வூதிய மாற்றத்தை அமலாக்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களின் நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்.

நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவீதம் ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண் டும். பல்வேறு இலாகா தேர்வுகளை உடனே நடத்த வேண்டும்.  

ஊதிய தேக்க நிலைக்கு தீர்வு காண புதிய பதவி உயர்வு கொள்கையை அமலாக்க வேண்டும் என்பது உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மேலும் அடுத்த மாதம் 5-ந்தேதி மாவட்ட தலைமை அலுவலகம் நோக்கி பேரணி, 22-ந்தேதி மாநில தலைமை அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 
Tags:    

Similar News