செய்திகள்
டி வில்லியர்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்து டி வில்லியர்ஸ் சாதனை

Published On 2021-04-27 18:04 GMT   |   Update On 2021-04-27 18:04 GMT
ஐபிஎல் கிரிக்கெட்டில் டேவிட் வார்னருக்குப் பிறகு 5 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை ஏபி டி வில்லியர்ஸ் பெற்றுள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகளுக்கு இடையிலான போட்டியில் அகமதாபாத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் விளாசியது. இதற்கு ஏபி டி வில்லியர்ஸின் அதிரடி முக்கிய காரணம். அவர் 42 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 75 ரன்கள் விளாசினார்.

12 ரன்கள் எடுத்திருந்தபோது, ஐபிஎல் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களை பதிவு செய்தார். இதன்மூலம் 5 ஆயிரம் ரன்கள் அடித்த 2-வது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் டேவிட் வார்னர் 5 ஆயிரம்  ரன்கள் அடித்துள்ளார்.



மேலும், குறைந்த பந்துகளில் 5 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர்கள் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 37 வயதாகும் டி வில்லியர்ஸ் 3288 பந்துகளில் 5 ஆயிரம் ரன்கள் அடித்துள்ளார். டேவிட் வார்னர் 3554 பந்துகளில் 5 ஆயிரம் ரன்கள் அடித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா 3620 பந்துகளில் அடித்துள்ளார். ரோகித் சர்மா 3817 பந்துகளிலும், விராட் கோலி 3827 பந்துகளிலும் 5 ஆயிரம் ரன்கள் அடித்துள்ளனர்.
Tags:    

Similar News