உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கோவையில் கஞ்சா விற்ற 11 பேர் கைது

Published On 2022-04-16 09:49 GMT   |   Update On 2022-04-16 09:49 GMT
துடியலூர், பொள்ளாச்சி, பெரியநாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: 

கோவை உக்கடம் பை--பாஸ் ரோட்டில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கடைவீதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். 

அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்த முத்தாலப்பன்(வயது 31), நாகராஜபுரத்தை சேர்ந்த பிரவீன்(23), தெலுங்கு-பாளையம் எல்.ஐ.சி காலனியை சேர்ந்த விவேகானந்தன்(22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். 

பின்னர் அவர்களிடமிருந்து 2 கிலோ  500 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்-படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

குனியமுத்தூர் இடையர்பாளையம் அம்மன் காலனியில் சிலர் கஞ்சா விற்பதாக குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போத்தனூர் மைல்கல் பாரதிநகரை சேர்ந்த ஷாரூக்கான்(22) என்பவரை கைது செய்தனர்.  அவரிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

பின்னர் ஷாரூக்கானை சிறையில் அடைத்தனர். இதேபோன்று கோவை புறநகர் பகுதியான துடியலூர், பொள்ளாச்சி, பெரியநாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்-களிடம் இருந்து 2 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News