செய்திகள்
வாக்குச்சாவடி

நெல்லை மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 7 சதவீத ஓட்டுப்பதிவு

Published On 2021-10-09 07:04 GMT   |   Update On 2021-10-09 07:04 GMT
வள்ளியூர் யூனியனில் 6.5 சதவீத வாக்குகளும், ராதாபுரம் யூனியனில் மிகவும் குறைந்த அளவாக 4.17 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் இன்று நடைபெறும் 2-வது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 6.59 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. களக்காடு யூனியனில் மட்டும் அதிகபட்சமாக காலை 9 மணி நிலவரப்படி 10.50 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. நாங்குநேரி யூனியனில் 7.93 சதவீத வாக்குகளும், வள்ளியூர் யூனியனில் 6.5 சதவீத வாக்குகளும், ராதாபுரம் யூனியனில் மிகவும் குறைந்த அளவாக 4.17 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

இன்று காலை 11 நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் 18 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

Tags:    

Similar News