செய்திகள்
நேபாள பிரதமர் ஒலியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

நேபாள பிரதமர் கே.பி.ஒலியுடன் வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

Published On 2019-08-21 10:54 GMT   |   Update On 2019-08-21 10:54 GMT
நேபாளத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் அந்நாட்டு பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியை இன்று சந்தித்தார்.
காத்மாண்டு:

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வங்காள தேசம், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். 

முதல் நாளில் வங்காள தேசம் சென்ற அவர் அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஏ.கே.அப்துல் மோமனை சந்தித்து இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார். தன்மண்டியில் உள்ள பங்கபந்து நினைவு அருங்காட்சியகத்தில் உள்ள அந்நாட்டு தேசத்தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவகத்தில் மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், இரண்டாவது நாளில் வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் நேபாளம் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றார். அவர் நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலியை சந்தித்தார். நேபாளம் - இந்தியா கூட்டு ஆணையத்தின் ஐந்தாவது கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News