சமையல்
அவரைக்காய் முட்டை பொரியல்

நார்ச்சத்து நிறைந்த அவரைக்காய் முட்டை பொரியல்

Published On 2022-04-25 05:32 GMT   |   Update On 2022-04-25 05:32 GMT
நார்ச்சத்து அதிகம் உள்ள அவரைக்காய்களை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும். தினமும் உணவில் அவரைக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
தேவையான பொருட்கள்

அவரைக்காய் - 50 கிராம்
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - சிறிது
முட்டை - 2
உப்பு - தேவைக்கு ஏற்ப

தாளிக்க

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலை பருப்பு
கறிவேப்பிலை

செய்முறை

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

அவரைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அதன் பிறகு அவரைக்காய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

அவரைக்காய் வதங்கியதும் அதில் முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறிவிடவும்.

மேலும், இரண்டும் நன்றாக வெந்து பூப்போல் உதிரியாக வந்ததும் இறக்கவும்.

இப்போது சுவையான அவரைக்காய் முட்டை பொரியல் ரெடி.

இது எல்லா வகையான சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.
Tags:    

Similar News