செய்திகள்

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம்- இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஏஞ்சலிக் கெர்பர்

Published On 2018-07-12 13:48 GMT   |   Update On 2018-07-12 13:48 GMT
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். #Wimbledon2018
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதலில் நடைபெற்ற அரையிறுதி ஒன்றில் 11-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியைச் சேர்ந்த ஏஞ்சலிக் கெர்பர் 12-ம் நிலை வீராங்கனையான லாத்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோவை எதிர்கொண்டார்.

இரண்டு வீராங்கனைகளும் அடுத்தடுத்த தரநிலை பெற்றிருந்ததால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏஞ்சலிக் கெர்பர் 6-3, 6-3 என எளிதில் நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.



ஏஞ்செலிக் கெர்பர் இறுதிப் போட்டியில் செரீனா வில்ல்லியம்ஸ் அல்லது ஜூலியா ஜார்ஜெஸ் ஆகியோரில் ஒருவரை எதிர்கொள்வார்.
Tags:    

Similar News