செய்திகள்
கோப்புபடம்.

உடுமலை ரெயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் தீவிரம்

Published On 2021-07-20 11:32 GMT   |   Update On 2021-07-20 11:32 GMT
பணிகள் நிறைவு பெற்றால் அகல ரெயில்பாதையில் கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்துள்ளது.
உடுமலை :

திண்டுக்கல்-பாலக்காடு ரெயில்பாதை அகல ரெயில்பாதையாக மேம்படுத்தப்பட்ட பிறகு பழநி, உடுமலை, பொள்ளாச்சிக்கு கூடுதல் ரெயில் சேவை உட்பட பல்வேறு எதிர்பார்ப்புகள் ரெயில் பயணிகளிடையே ஏற்பட்டது.

அதே போல் பிற கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த ரெயில் பயணிகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. அவ்வகையில் திண்டுக்கல் முதல் பாலக்காடு வரையிலான 179 கி.மீ., தொலைவுக்கு ரெயில் பாதையை மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ் மின்மயமாக்கும் பணிகள் கடந்தாண்டு  தொடங்கியது.

தற்போது உடுமலை பகுதியில் மின்மயமாக்கலுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளது. இப்பணிகள் நிறைவு பெற்றால் அகல ரெயில்பாதையில்  கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News