செய்திகள்
கோப்புபடம்

வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமில் இதுவரை 21 ஆயிரம் பேர் விண்ணப்பம்-வருகிற 27, 28ந்தேதியும் நடக்கிறது

Published On 2021-11-23 07:35 GMT   |   Update On 2021-11-23 08:53 GMT
அதிகபட்சமாக பல்லடம் தொகுதியில் 4,019 பேர் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர்.
திருப்பூர்:

தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலை பின்பற்றி வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் கடந்த 13, 14-ந் தேதி நடந்தது. இரு முகாமில் சேர்த்து புதிய வாக்காளராக, 9,962 பேர் விண்ணப்பித்திருந்தனர். மேலும் 20, 21-ந்தேதிகளிலும் மாவட்டத்தில் உள்ள 1,058 மையம், 2,512 ஓட்டுச்சாவடிகளில் முகாம் நடந்தது. 

புதிய வாக்காளராக வேண்டி 11 ஆயிரத்து, 663 பேர் விண்ணப்பித்தனர். நான்கு முகாம்களில் மொத்தம் சேர்த்து 21 ஆயிரத்து 625 பேர் வாக்காளராக விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக பல்லடம் தொகுதியில் 4,019 பேர் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர். 

குறைந்தபட்சமாக மடத்துக்குளத்தில் 1,818 பேர் விண்ணப்பித்தனர். திருப்பூர் வடக்கில் 3,516 பேரும், அவிநாசியில் 2,704 பேரும், உடுமலையில் 2,712 பேரும், தெற்கில் 2,377 பேரும், காங்கயத்தில், 2,526 பேரும், தாராபுரத்தில் 1,953 பேரும் என மொத்தம் 21 ஆயிரத்து 625 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மாவட்டத்தில் பெயர் நீக்க, 4,430 பேர் விண்ணப்பித்தனர். வாக்காளர் வசதிக்காக வரும் 27, 28-ந்தேதி மீண்டும் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News