செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

குடிநீர் டிராக்டர் மோதி மின்கம்பம் சாய்ந்தது- மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் விடிய விடிய தவிப்பு

Published On 2020-01-10 11:41 GMT   |   Update On 2020-01-10 11:41 GMT
வேலூரில் நேற்று இரவு குடிநீர் டிராக்டர் மோதி மின்கம்பம் சாய்ந்ததால் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

வேலூர்:

வேலூர் ஆற்காடு சாலையில் இருந்து சைதாப்பேட்டை பகுதிகளுக்கு டிராக்டர்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

நேற்றிரவு ஆற்காடு சாலையில் இருந்து சுப்பராம அய்யர் தெரு வழியாக சைதாப்பேட்டைக்கு தண்ணீர் டிராக்டர் ஒன்று சென்றது சுப்பராம அய்யர் தெருவில் உள்ள குறுகலான பகுதியில் திரும்பியபோது அங்கிருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் முறிந்து விழுந்தது.

இதில் மின் ஒயர்கள் ஒன்றுக்கொன்று உரசி தீப்பொறிகள் பறந்தன. 100-க்கும்மேற்பட்ட வீடுகளில் பீஸ் போனது. மின்கம்பிகள் ஒரே நேரத்தில் தரையில் விழுந்ததால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

இதுபற்றி மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிகப்பட்டது. ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின்சாரத்தை தடை செய்தனர். இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மின்சாரம் இல்லாமல் விடிய விடிய தவித்தனர்.

இன்று காலையில் மீட்புப் பணிகள் நடந்தது. மின் ஒயர்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். சுப்பராம அய்யர் தெருவில் குறுகலான வளைவுகள் இருப்பதால் இதன் வழியாக டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Tags:    

Similar News