ஆட்டோமொபைல்
ஹார்லி டேவிட்சன் லைவ் வையர்

பேட்டரியில் ஓடும் ஹார்லி டேவிட்சன் குரூயிஸ் பைக் - இந்திய வெளியீடு விவரம்

Published On 2019-07-28 09:47 GMT   |   Update On 2019-07-28 09:47 GMT
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் பேட்டரி மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் அனைத்துமே குரூயிஸ் ரகங்கள்தான். நீண்ட தொலைவு செல்வதற்கு ஏற்ற வகையிலான இந்த மோட்டார்சைக்கிள்கள் பிரீமியம் வகையைச் சேர்ந்தவை. 

இந்தியாவிலும் இந்த மோட்டார்சைக்கிள்கள் தற்போது கிடைக்கின்றன. ஆட்டோமொபைல் உலகமே பேட்டரி வாகனத் தயாரிப்பு பக்கம் திரும்பியிருக்கும் நிலையில் ஹார்லி டேவிட்சன் நிறுவனமும் பேட்டரி மோட்டார்சைக்கிளை தயாரித்துள்ளது. 2020-ம் ஆண்டில் விற்பனைக்கு வர உள்ள இந்த மோட்டார் சைக்கிளை 2018-ம் ஆண்டிலேயே தயாரித்து காட்சிப்படுத்தியது.

இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்னணு கண்காட்சியிலும் இந்த மோட்டார்சைக்கிள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது. இந்த பேட்டரி மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு சமீபத்தில் தொடங்கிய நிலையில், இந்த மாடல் ஹார்லி டேவிட்சன் இந்திய வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இது இந்த மாடலின் இந்திய வெளியீட்டை உறுதி செய்திருக்கிறது. 



இந்த மோட்டார்சைக்கிளின் விலை 30,000 அமெரிக்க டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.20.56 லட்சமாகும்.  ‘லைவ் வையர்’ என்ற பெயரில் இந்த மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வர உள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் டெலிமேட்டிக் சிஸ்டம் (ஹெச்.டி. கனெக்ட்) உள்ளது. இது பேட்டரி சார்ஜ் செய்ய வேண்டிய நேரம், சர்வீசுக்கு விட வேண்டிய தினம் உள்ளிட்டவற்றை அறிவுறுத்தும். 

ஆக்சிலரேட்டரை முறுக்கினால் பறக்கும் பெட்ரோல் மோட்டார் சைக்கிள்களுக்கு இணையான வகையில் இதன் வேகம் இருக்கும். 3.5 விநாடிகளில் இது மணிக்கு 0 முதல் 100 கி.மீ. வேகத்தைத் தொடும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 177 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம். 

இந்த மோட்டார்சைக்கிளில் டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஏ.பி.எஸ். ஆகியன உள்ளன. டிரெலிஸ் ஃபிரேம், டி.எப்.டி. இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் ஆகியன இதன் சிறப்பம்சமாகும்.
Tags:    

Similar News