செய்திகள்
தினேஷ் குண்டுராவ்

தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமனம்

Published On 2020-09-11 18:04 GMT   |   Update On 2020-09-11 18:04 GMT
தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:

தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் புதுச்சேரி, கோவா மாநிலங்களையும் தினேஷ் குண்டுராவ் கவனிப்பார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 

தெலுங்கானா மாநில பொ​றுப்பாளராக தமிழக எம்.பி. மாணிக்கம் தா​கூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒடிசா மாநில பொறுப்பாளராக செல்லகுமார் எம்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார் என கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். 

மேலும், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவுக்கு துணையாக செயல்பட சிறப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. 6 பேர் கொண்ட அந்தக் குழுவில் ஏ.கே.அந்தோனி, அகமத் படேல், அம்பிகா சோனி, கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக் மற்றும் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். காங்கிரஸ் காரிய கமிட்டிக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News