செய்திகள்
சின்ன வெங்காயம்

மதுரையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.160-க்கு விற்பனை

Published On 2021-02-20 03:46 GMT   |   Update On 2021-02-20 03:46 GMT
மதுரையில் சி்ன்ன வெங்காயம் சில்லறை விலையில் கிலோ ரூ.160 வரை விற்பனையானது.
மதுரை:

கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால், சின்ன வெங்காயம் சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது.

குறிப்பாக வேர் அழுகல் நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால், சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

மதுரை மார்க்கெட்டுகளில் கடந்த வாரம் சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கு மொத்த விலையில் விற்பனையானது. ஆனால், ஒரே வாரத்தில் கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை உயர்ந்துள்ளது. அதன்படி, நேற்று மொத்த விலையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.120 முதல் ரூ.130 வரை விலை உயர்ந்து விற்பனையானது. சில்லறை விலையில் கிலோ ரூ.160 வரை விற்பனையானது.

பெரிய வெங்காயம் மொத்த விலையில் கிலோ ரூ.40-ரூ.55 வரை விற்பனையாகிறது. சில்லறை விலையில் கிலோ ரூ.60-க்கு விற்பனையானது.

மதுரை மார்க்கெட்டில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களுக்கும், தேனி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கும், கேரளாவின் சில பகுதிகளுக்கும் விற்பனைக்காக வெங்காயம் கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News