உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

தியாகராஜர் கோவிலில் புஷ்பாஞ்சலி விழா

Published On 2022-01-08 09:40 GMT   |   Update On 2022-01-08 09:40 GMT
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் புஷ்பாஞ்சலி விழா பக்தர்களின்றி நடைபெற்றது.
திருவாரூர்:

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால் 
தமிழக அரசு பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளது. 

அந்த வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் தியாகராஜர் கோயில் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் பொதுமக்கள் வழிபாடு நடத்த 
அனுமதிக்கப்படாததால் கோவில்கள் வெறிச்சோடின. 

இந்துமத கோவில்களில் மார்கழி மாதம் சிறப்பு பூஜைகள் 
நடைபெறுவது வழக்கம். 

அந்த வகையில் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மார்கழி கடை வெள்ளியை முன்னிட்டு இரவு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி 
பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

அதுபோல் வைணவ ஆலயங்களில் மார்கழி மாத பகல்பத்து விழாக்கள் நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாள் பக்தர்கள் இன்று 
பகல்பத்து நிகழ்ச்சி நடைபெற்றது. 

திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோவில் மற்றும் புலிவலம் அப்பன் பெருமாள் கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் இன்றி 
பகல்பத்து நிகழ்ச்சி நடைபெற்றது. 

அரசின் தடை உத்தரவு தெரியாமல் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Tags:    

Similar News