உள்ளூர் செய்திகள்
கருமாண்டிசெல்லிபாளையம் ரேஷன்கடையில் பொங்கல்தொகுப்பு விநியோகத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.

ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு விநியோகத்தை ஆய்வு செய்த கலெக்டர்

Published On 2022-01-12 10:04 GMT   |   Update On 2022-01-12 10:04 GMT
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா கருமாண்டி செல்லிபாளையம் ரேஷன்கடையில் பொங்கல்தொகுப்பு விநியோகத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா கருமாண்டி செல்லிபாளையம் ரேஷன்கடையில் பொங்கல்தொகுப்பு விநியோகத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

மேலும் குடும்பஅட்டைதாரர்களிடம் பொங்கல்பரிசு பொருட்கள் சரியான எண்ணிக்கையில் வழங்கப்படுகிறதா? என்பதை கேட்டறிந்தார். 

மேலும் பொங்கல்பரிசு தொகுப்புகள் பெறும் குடும்பஅட்டைதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாட்களில் கட்டாயம் முககவசம் அணிந்து கொண்டும், சமூகஇடைவெளியை பின்பற்றியும், கொரோனா தடுப்புநடவடிக்கைகளை முறையாக கடைபிடித்து பரிசுபொருட்களை பெற்றுகொள்ளவேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக குடும்பஅட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளையும் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது பெருந்துறை தாசில்தார் கார்த்தி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News