செய்திகள்
ஆதித்யா டரே

ரஞ்சி டிராபி: தமிழ்நாட்டுக்கு எதிராக மும்பை 488 ரன்கள் குவிப்பு

Published On 2020-01-12 15:56 GMT   |   Update On 2020-01-12 15:56 GMT
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாட்டுக்கு எதிராக மும்பை அணி 488 ரன்கள் குவித்துள்ளது.
ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் தமிழ்நாடு - மும்பை அணிகள் மோதிய ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் மும்பை 6 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் அடித்திருந்தது. ஆதித்யா டரே 69 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இன்று 2-வது ஆள் ஆட்டம் நடைபெற்றது. டரே உடன் போய்ர் ஜோடி சேர்ந்தார். போய்ர் 5 ரன்னில் வெளியேறினார். அதன்பின் அட்டார்டே களம் இறங்கினார். இவர் டரே உடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

டரே சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 154 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அட்டார்டே 58 ரன்கள் சேர்த்தார். தேஷ்பாண்டே 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க மும்பை அணி 488 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

தமிழ்நாடு அணி சார்பில் சாய் கிஷோர் நான்கு விக்கெட்டுக்களும், ஆர் அஸ்வின் 3 விக்கெட்டுக்களும், டி நடராஜன் இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் சேர்த்துள்ளது. அபிநவ் முகுந்த் 52 ரன்களுடனும், சூர்யபிரகாஷ் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News