உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பிளாஸ்டிக் கழிவுகளால் நீர் நிலைகளில் தண்ணீர் செல்வதில் சிக்கல்

Published On 2022-01-12 04:40 GMT   |   Update On 2022-01-12 04:40 GMT
தூர்வாரி தண்ணீர் சீராக செல்லும் வகையில் நகராட்சி, பொதுப்பணித்துறையினர் மற்றும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை:

உடுமலையில் தங்கம்மாள் ஓடை, கழுத்தறுத்தான் பள்ளம், ராஜவாய்க்கால் போன்ற நீராதாரங்கள் உள்ளன. மழைக் காலங்களில் இந்த நீர்நிலைகளின் வழியாக தண்ணீர் செல்வது வழக்கம். தற்போது இவற்றில் பிளாஸ்டிக், குப்பைக் கழிவுகள் தேங்கிக்கிடப்பதால் தண்ணீர் செல்ல முடியாமல் அடைத்துக்கொள்கிறது.

கனமழை பெய்யும் போது இவற்றின் அருகிலுள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து விடுகிறது. அங்குள்ள மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். நீர் ஆதாரங்கள் தூர்வாரப்படாததால் சிக்கல் ஏற்படுகிறது.

எனவே இவற்றை தூர்வாரி தண்ணீர் சீராக செல்லும் வகையில் நகராட்சி, பொதுப்பணித்துறையினர் மற்றும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Tags:    

Similar News