செய்திகள்
டாக்டர் வி.கே.பால்

கொரோனா வைரசின் 2-வது அலையை இன்னும் முழுமையாகக் கடக்கவில்லை: மத்திய அரசு

Published On 2021-07-09 12:29 GMT   |   Update On 2021-07-09 12:29 GMT
இந்தியாவில் இதுவரை லாம்ப்டா வைரஸ் கண்டறியப்படவில்லை என்று நிதி ஆயோக் சுகாதாரப்பிரிவு உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிதி ஆயோக் சுகாதாரப்பிரிவு உறுப்பினர் டாக்டர் வி.கே.பால்  கூறியதாவது:- "நாம் இன்னமும் கொரோனா 2வது அலையை முழுமையாகக் கடக்கவில்லை. இந்த சூழலில் நாம் நம் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மெத்தனம் காட்டக்கூடாது. 

பொது இடங்களில் சமீப நாட்களாக மக்கள் ஒன்றுகூடுகை அதிகமாக உள்ளது. அவ்வாறு கூடும்போது சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் சற்று குறைவாகவே உள்ளது. நாம், நமது பாதுகாப்பு நடவடிக்கைகளில் சமரசம் செய்யக்கூடாது.



பிரிட்டன், ரஷ்யா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் லாம்ப்டா வைரஸ் கண்டறியப்படவில்லை. ஆனால் லாம்ப்டா வைரசும் கவலை அளிக்கக்கூடிய வைரஸாகவே உள்ளது " என்றார்.

Tags:    

Similar News