வழிபாடு
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் இன்று புனித நீராடிய பக்தர்கள்.

கார்த்திகை மாத அமாவாசை: ராமேசுவரம் கடலில் புனித நீராடிய பக்தர்கள்

Published On 2021-12-04 05:17 GMT   |   Update On 2021-12-04 07:20 GMT
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் கார்த்திகை அமாவாசை நாளான இன்று அதிகாலையில் 3 மணி அளவில் கோவில் சன்னதி திறக்கப்பட்டது. அதன் பின்னர் 4 மணி முதல் 6 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடந்தது.
ராமேசுவரம் :

கார்த்திகை மாத அமாவாசையையொட்டி ராமேசுவரத்தில் இன்று அதிகாலையில் திரளான பக்தர்கள் குவிந்தனர். இவர்கள் அதிகாலையில் காசிக்கு நிகராக கருதப்படும் புனித தீர்த்தமான ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜைகள் செய்து புனித நீராடினர்.

பின்னர் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடினர். தொடர்ந்து ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் கார்த்திகை அமாவாசை நாளான இன்று அதிகாலையில் 3 மணி அளவில் கோவில் சன்னதி திறக்கப்பட்டது. அதன் பின்னர் 4 மணி முதல் 6 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடந்தன.

Tags:    

Similar News