செய்திகள்
மீன்கள்

மீன் மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்

Published On 2021-07-19 12:51 GMT   |   Update On 2021-07-19 12:51 GMT
காந்தி மார்க்கெட் போலீசார் மீன் மார்க்கெட்டுக்கு சென்று பொதுமக்களிடம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
திருச்சி:

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அரசு ஊரடங்கு அறிவித்தது. தொற்று குறைவு காரணமாக ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. திருச்சி மக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி, மீன் கடைகளுக்கு படையெடுப்பது வழக்கம்.

ஊரடங்கில் கூடுதல் தளர்வு அறிவிக்கப்பட்டு சகஜ நிலைக்கு திரும்பி வரும் நிலையில், பொதுமக்கள் காய்கறி சந்தை, மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பொதுமக்கள் கூடுவதால் சமூக இடைவெளியை பின்பற்றுவதில் சிரமம் ஏற்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் மீன் மார்க்கெட்டில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. கடந்த வாரத்திலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் போலீசார் வந்து ஒழுங்குபடுத்தினார்கள்.

அதேபோல் நேற்று காலையும் காந்தி மார்க்கெட் போலீசார் மீன் மார்க்கெட்டுக்கு சென்று பொதுமக்களிடம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் அங்க கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார்கள்.

பின்னர் மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க வந்த பொதுமக்களை வரிசையில் நிற்க வைத்து அனுப்பினர். அங்கு பொதுமக்கள் அதிகளவில் மீன்களை வாங்கிச் சென்றதையும் காணமுடிந்தது.

முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு போலீசார் தொடர்ந்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
Tags:    

Similar News