ஆட்டோமொபைல்
டெஸ்லா

பெங்களூரில் டெஸ்லா ஆய்வு மையம்

Published On 2020-09-22 09:49 GMT   |   Update On 2020-09-22 09:49 GMT
டெஸ்லா நிறுவனம் பெங்களூரில் புதிய ஆய்வு மையத்தை திறக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


டெஸ்லா நிறுவனம் பெங்களூரில் முதலீடு செய்வது பற்றி கர்நாடக அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுபற்றிய சந்திப்பு இந்த மாதம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

தற்சமயம் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், வரும் நாட்களில் இதுபற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவாகும் பட்சத்தில் அமெரிக்காவை தொடர்ந்து டெஸ்லா ஆய்வகம் கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா இருக்கும்.



கர்நாடக மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்காக 31 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு செய்யப்பட இருக்கிறது. இதற்கென பெங்களூரில் டையம்லர், போஷ் மற்றும் மஹிந்திரா எலெக்ட்ரிக் போன்ற நிறங்கள் இயங்கி வருகின்றன.

முன்னதாக ஷாங்காயில் டெஸ்லா நிறுவனம் கார் மற்றும் பேட்டரி உற்பத்திக்கான ஆலையை திறந்தது. மேலும் சீனாவின் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக டெஸ்லா இருக்கிறது.
Tags:    

Similar News