ஆட்டோ டிப்ஸ்
நியோ இ.டி.5

முழு சார்ஜ் செய்தால் ஆயிரம் கி.மீ. செல்லும் எலெக்ட்ரிக் கார்

Published On 2021-12-22 09:08 GMT   |   Update On 2021-12-22 09:08 GMT
சீனாவை சேர்ந்த நியோ நிறுவனத்தின் நியோ இ.டி.5 முழு சார்ஜ் செய்தால் ஆயிரம் கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.


சீன எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளரான நியோ இ.டி.5 பெயரில் புதிய எலெக்ட்ரிக் செடான் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் செடான் முழு சார்ஜ் செய்தால் ஆயிரம் கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

சீனாவில் புதிய நியோ இ.டி.5 விலை 51,476 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 38,90,594 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலின் வினியோகம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்குகிறது. ரேன்ஜ் அடிப்படையில் இந்த கார் டெஸ்லாவின் மாடல் 3-க்கு போட்டியாக அமைகிறது.



நியோ இ.டி.5 மாடல் - 75 கிலோவாட் ஹவர், 100 கிலோவாட் ஹவர் மற்றும் 150 கிலோவாட் ஹவர் என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் 150 கிலோவாட் ஹவர் பேட்டரி மாடல் நீண்ட தூரம் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

இதன் பேஸ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 550 கிலோமீட்டர்களும், 100 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட மாடல் முழு சார்ஜ் செய்தால் 750 கிலோமீட்டர்களும் செல்லும். இந்த கார் டூயல் மோட்டார் செட்டப் கொண்டது ஆகும். இவை இணைந்து 483 பி.ஹெச்.பி. திறன், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன.
Tags:    

Similar News