லைஃப்ஸ்டைல்
உடற்பயிற்சி

உடற்பயிற்சியை லைஃப் ஸ்டைலாக மாற்றிக் கொள்ள வேண்டும்

Published On 2019-11-12 03:20 GMT   |   Update On 2019-11-12 03:20 GMT
உடற்பயிற்சியை சிறு வயதில் இருந்தே லைஃப் ஸ்டைலாக மாற்றிக் கொள்ள வேண்டும். எந்த வயதினரும் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். ஃபிட்டாக இருக்கும்போது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
‘‘முதலில் நம்மை நமக்குப் பிடிக்க வேண்டும். திருமணம் வரை உடல் எடையைப் பராமரிக்கும் அக்கறை திருமணத்துக்குப் பின் காணாமல் போகிறது. நாம் ஏன் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பது பற்றிய அறியாமையால் கண்டுகொள்ளாமல் விடுகின்றனர். உடற்பயிற்சியின் நன்மைகள் தெரிந்திருந்தாலும் நேரம் இல்லை என்ற காரணத்தைச் சொல்கின்றனர்.

நமது நேரத்தை எதற்கெல்லாம் செலவிடுகிறோம் என்று திரும்பிப் பார்த்தால் எவ்வளவு நேரத்தை வீணாகச் செலவழிக்கிறோம் என்பது புரியும். இரவு டிவி சீரியல், சாட்டிங் என்று நல்லிரவு வரை நேரம் வீணாகும். இதனால் காலையில் தாமதமாக எழுந்து அவசர வாழ்க்கைக்கும் பழகிக் கொள்கின்றனர். ஆனால், இந்த அவசரமும் ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை முறையும் உடலிலும் உள்ளத்திலும் பலவிதப் பிரச்னைகளுக்குக் காரணம் ஆகிறது.

அன்பைத் தக்கவைக்க உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது முதல்படி. இதற்காக தம்பதியர் நேர மேலாண்மையில் அக்கறை செலுத்த வேண்டும். நேரத்தை முறைப்படி திட்டமிட்டு உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடியும். உடற்பயிற்சியை சிறு வயதில் இருந்தே லைஃப் ஸ்டைலாக மாற்றிக் கொள்ள வேண்டும். எந்த வயதினரும் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். ஃபிட்டாக இருக்கும்போது தன்னம்பிக்கை அதிகரிக்கும். இது தாம்பத்யத்திலும் எதிரொலிக்கும்.’’

‘‘உடற்பயிற்சி செய்ய எண்ணம் வந்த உடன் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வது பணத்தை வீணடித்து உடற்பயிற்சி சாதனங்கள் வாங்கிக் குவிப்பதும் பலரும் செய்வது. ஆர்வம் வந்த உடன் ஆலோசனை பெறுவது முக்கியம். உங்களின் உடல் நலம், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து என்ன மாதிரியான உடற்பயிற்சிகள் மற்றும் உணவுத் திட்டத்தைப் பின்பற்றலாம் என்பதையும் மருத்துவரின் ஆலோசனைப்படி முடிவு செய்யுங்கள். உங்கள் உடல்நிலைக்குப் பொருந்தாத உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.’’
Tags:    

Similar News