ஆட்டோமொபைல்
கேடிஎம் ஆர்சி 390

வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்ட கேடிஎம் ஆர்சி 390

Published On 2021-04-12 06:00 GMT   |   Update On 2021-04-12 06:00 GMT
கேடிஎம் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஆர்சி 390 மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


2021 கேடிஎம் ஆர்சி 390 மோட்டார்சைக்கிள் எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வரிசையில், 2020 கேடிஎம் ஆர்சி 390 இந்திய வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

புதிய ஆர்சி 390 பல்வேறு மாற்றங்களுடன் உருவாகி வருகிறது. புது மாடலின் ரைடிங் பொசிஷன் மாற்றப்பட்டு டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 310 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது. இதுதவிர புது ஸ்டைலிங் மற்றும் பாடிவொர்க் கொண்டிருக்கிறது.



ஸ்பை படங்களின் படி இந்த மாடலில் புல் எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்படுகிறது. இது ஆர்சி8 சூப்பர்பைக் மாடலில் இருந்ததை போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் புது மாடல் மேம்பட்ட பிரேம், சப்-பிரேம், வீல்கள், புது சீட்கள் மற்றும் எக்சாஸ்ட் கேனிஸ்டர் வழங்கப்படுகிறது.

390 டியூக் மாடலில் உள்ளதை போன்றே 2021 ஆர்சி 390 மாடலிலும் டிஎப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் சற்றே மாற்றப்பட்ட 373சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படலாம். புதிய மாடல் விலை ரூ. 2.80 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
Tags:    

Similar News