செய்திகள்
கொரோனா வைரஸ்

டாக்டர்கள், நர்சுகள் வசதிக்காக கொரோனா தாக்காமல் இருக்க அதிநவீன கவச உடை அறிமுகம்

Published On 2020-11-22 01:55 GMT   |   Update On 2020-11-22 01:55 GMT
டாக்டர்கள், நர்சுகள் வசதிக்காக கொரோனா தாக்காமல் இருக்க அதிநவீன கவச உடையை சி.ஆர்.பி.எப். படைப்பிரிவு தலைமை அதிகாரி அறிமுகம் செய்து உள்ளார்.
ஆவடி:

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க டாக்டர்கள், நர்சுகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தற்போது ‘பி.பி.இ. கிட்’ எனப்படும் நெகிழி முலாம் பூசப்பட்ட கவச உடையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த உடையை அணிவதால் காற்று உள்ளே நுழையமுடியாது. இதனால் வியர்வை அதிகமாக சுரப்பதால் சிரமப்படுவதுடன், உடல் சோர்வு, எரிச்சல் ஏற்படுகிறது.

அத்துடன் இந்த ஆடையை ஒருமுறை பயன்படுத்திய பிறகு பத்திரமாக அப்புறப்படுத்த வேண்டும். சிறிதளவு கவனக்குறைவு ஏற்பட்டாலும் கொரோனா தாக்கும் அபாயம் அதிகமாக இருக்கிறது. ஒருமுறை பயன்படுத்திய பின்னர் அந்த ஆடைகளை எரிப்பதால் மட்டுமே அதில் தங்கியுள்ள நுண் உயிரிகளை அழிக்க முடியும். இவ்வாறு எரிக்கப்படும் ஆடைகளில் இப்படி நாள்தோறும் எரியூட்டப்படும் பல்லாயிரக்கணக்கான ஆடைகளை எரிப்பதால் உண்டாகும் புகை சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய கெடுதலை ஏற்படுத்துகிறது.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களின் வசதிக்காகவும் எந்த விதமான எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தாத காற்றோட்டத்துடன் கூடிய ஒரு பிரத்யேகமான அதிநவீன கவச உடையை ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 97-வது படைப்பிரிவின் தலைமை அதிகாரி எரிக் கில்பர்ட் ஜோஸ் வடிவமைத்து உள்ளார். நவீன தொழில்நுட்பத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஆடையை நேற்று மாலை அறிமுகம் செய்து வைத்தார். நுண்ணுயிரி தொற்றில் இருந்து காக்க இந்த ஆடை மிகபாதுகாப்பானது என சான்று தரப்பட்டு உள்ளதாகவும், விரைவில் இந்த ஆடை குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News