செய்திகள்
ஸ்விகி

பெண் ஊழியர்களுக்கு மாதத்தில் 2 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அறிவித்த ஸ்விகி

Published On 2021-10-23 06:39 GMT   |   Update On 2021-10-23 07:06 GMT
ஸ்விகி அறிவித்துள்ள இந்த திட்டத்தின் மூலம், பெண் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 24 நாட்களுக்கு விடுப்பு கிடைக்கும்.
சென்னை:

இந்திய அளவில் ஆன்லைன் மூலம் உணவு விநியோக சேவை செய்யும் நிறுவனங்களில் ஸ்விகி பிரபலமானது. இங்கு ஆண்கள், பெண்கள் என ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், உணவு விநியோகம் செய்யும் பிரிவில் ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு, பெண்களை பணியில் சேர ஊக்கப்படுத்தும் வகையில் ஸ்விகி பல்வேறு வசதிகளையும், திட்ட கொள்கைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்தவகையில், பெண் ஊழியர்கள் அசௌகரியமாக உணரும் தங்களின் மாதவிடாய் காலத்தில் இரண்டு நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று
ஸ்விகி
அறிவித்துள்ளது.



இதுகுறித்து, ஸ்விகி நிறுவனத்தின் செயல்பாட்டு துணைத் தலைவர் மிஹிர் ஷா கூறுகையில், "பெண்கள் தங்களின் மாதவிடாய் காலத்தின்போது வெளியில் செல்லவே அசௌகரியமாக உணருகின்றனர். பெண்கள் உணவு விநியோகம் செய்ய தயங்குவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது. அதனால், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், பெண் ஊழியர்கள் தங்களின் மாதவிடாய் காலத்தில் இரண்டு நாட்களுக்கு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். அதற்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படாது. இந்த திட்ட அறிவிப்பின் மூலம், பெண் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 24 நாட்களுக்கு விடுப்பு கிடைக்கும்" என்றார்.


Tags:    

Similar News