ஆட்டோமொபைல்
2020 மாருதி சுசுகி செலரியோ எக்ஸ்பி.எஸ்.6

இந்தியாவில் 2020 மாருதி சுசுகி செலரியோ எக்ஸ் பி.எஸ்.6 அறிமுகம்

Published On 2020-03-30 11:29 GMT   |   Update On 2020-03-30 11:29 GMT
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் 2020 செலரியோ எக்ஸ் பி.எஸ்.6 அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.



மாருதி சுசுகி நிறுவனம் பி.எஸ்.6 ரக செலரியோ எக்ஸ் ஹேட்ச்பேக் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மாருதி சுசுகி செலரியோ எக்ஸ் பி.எஸ்.6 காரின் துவக்க விலை ரூ. 4.9 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

புதிய செலரியோ எக்ஸ் பி.எஸ்.6 மாடல் - VXi, VXi (O), ZXi மற்றும் ZXi (O) என நான்கு வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியண்ட்களின் விலையிலும் ரூ. 15 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5.67 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



தோற்றத்தில் புதிய 2020 மாருதி செலரியோ எக்ஸ் பி.எஸ்.6 மாடல் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும், இது இளைஞர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய மாடல் பல்வேறு பிரகாசமான நிறங்களில் கிடைக்கிறது.

புதிய செலரியோ எக்ஸ் மாடலிலும் 1.0 லிட்டர் கே சீரிஸ் என்ஜின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் எஸ் பிரெஸ்ஸோ மற்றும் ஆல்டோ கே10 மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மூன்று சிலிண்டர் என்ஜின் 68 பி.ஹெச்.பி. பவர், 90 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் மாற்றங்கள் தவிர புதிய மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய மாடலில் பிளாக்டு-அவுட் கேபின், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் எம்.ஐ.டி. வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்கு ஏ.பி.எஸ். இ.பி.டி., ஹை ஸ்பீடு வார்னிங் மற்றும் பெடஸ்ட்ரியன் ப்ரோடெக்ஷன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News