செய்திகள்
வாக்குப்பெட்டிகளை கலெக்டர் ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக தயார் நிலையில் வாக்குப்பெட்டிகள்

Published On 2019-12-05 14:36 GMT   |   Update On 2019-12-05 14:36 GMT
திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக தயார் நிலையில் உள்ள வாக்குப்பெட்டிகளை கலெக்டர் ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவாரூர்:

திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக தயார் நிலையில் உள்ள வாக்குப்பெட்டிகளை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஆனந்த பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குப்பெட்டிகள் பெரிய பெட்டி, நடுத்தர பெட்டி, சிறிய பெட்டி என மூன்று வகையான வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. இப்பெட்டிகளில் பெரிய பெட்டியில் 400 வாக்காளர்கள் 4 வாக்குகள் வீதம் 1,600 வாக்குகளை செலுத்தலாம். நடுத்தர பெட்டியில் 300 வாக்காளர்கள் 4 வாக்குகள் வீதம் 1,200 வாக்குகளை செலுத்தலாம். சிறிய பெட்டியில் 125 வாக்காளர்கள் 4 வாக்குகள் வீதம் 500 வாக்குகளை செலுத்தலாம்.

திருவாரூர் ஒன்றியத்திற்கு பெரிய பெட்டி 186, நடுத்தர பெட்டி 59, சிறிய பெட்டி 201 என மொத்தம் 446 பெட்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களுக்கும் வாக்காளர்கள் அடிப்படையில் இந்த வாக்குப்பெட்டிகள் ஒதுக்கீடு செய்து தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கிரு‌‌ஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், சுந்தரலிங்கம், திருவாரூர் தாசில்தார் நக்கீரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News