லைஃப்ஸ்டைல்
குழந்தைகளை தடுப்பூசி போட தயார்ப்படுத்துவது எப்படி?

குழந்தைகளை தடுப்பூசி போட தயார்ப்படுத்துவது எப்படி?

Published On 2019-12-18 05:49 GMT   |   Update On 2019-12-18 05:49 GMT
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் போது தயார்ப்படுத்துவது எப்படி என்று பலருக்கும் தெரிவதில்லை. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுகிறோம். அதன் பிறகு குழந்தைகளுக்கான பராமரிப்பு எப்படி இருக்க வேண்டும் எனப் பலருக்கும் தெரிவதில்லை. தடுப்பூசி போட்ட பிறகு பின் விளைவுகள் வருவது பொதுவான விஷயம்தான். அதை எப்படி எதிர்கொள்வது? குழந்தைகளை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது… இதைப் பற்றி முழுமையாக இங்குப் பார்க்கலாம்.

சின்ன குழந்தைகளை தடுப்பூசிக்கு தயார்ப்படுத்துதல்…

எளிதில் கழற்றகூடிய லேசான ஆடைகளைக் குழந்தைக்கு அணிவிப்பது நல்லது. அரை கை சட்டை உள்ள ஆடைகள் நல்லது. 12 மாதத்துக்கு கீழ் உள்ள குழந்தைக்கு தொடையில் ஊசி போடுவது நல்லது. 1 வயது + குழந்தைகளுக்கு, மருத்துவர் பரிந்துரைப்பின்படி இடுப்பிலோ கையிலோ ஊசி போடலாம். ஊசி போடும்போது குழந்தையை நன்கு அரவணைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புங்கள்.

குழந்தையை கட்டி அணைப்பது, பாடுவது, இதமாகப் பேசுவது போன்றவற்றை செய்யலாம். குழந்தையின் கண் பார்த்துப் பேசுங்கள். குழந்தையை பார்த்து புன்னகை செய்யுங்கள். குழந்தை பாதுகாப்பாக உணரும்படி அரவணைத்துக் கொள்ளுங்கள் கைகளில் ஒரு பொம்மையை வைத்து விளையாட்டு காண்பிக்கலாம். குழந்தையை துணியால் போர்த்தி அரவணைக்கலாம். குழந்தையை, தடுப்பூசி போடும்போது உங்களது மடியில் வைத்திருங்கள்.

பெரிய குழந்தைகளை தடுப்பூசிக்கு தயார்ப்படுத்துதல்…

வலியில் இருந்து மீள ஆழ்ந்த மூச்சு விடும்படி சொல்லி கொடுங்கள் பொய் சொல்லி ஏமாற்ற வேண்டாம். உண்மையை சொல்லி குழந்தையை தயார்படுத்துங்கள். அறையில் உள்ள பொருட்களைக் காண்பித்து குழந்தையின் கவனத்தை மாற்றுங்கள். அழும் குழந்தையை சமாதானம் செய்யுங்கள் குழந்தை பயப்படுகிறது எனத் திட்ட வேண்டாம். கேலி, கிண்டல் செய்ய வேண்டாம்.

மருத்துவரிடம் இதன் பிறகான பராமரிப்புகளைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஈரமான துணியை ஊசி போட்ட இடத்தில் வைத்து லேசாகத் தொட்டு தொட்டு எடுக்கவும். காய்ச்சல் வந்தால், தண்ணீரில் நனைத்த துணியை உடலில் தொட்டு தொட்டு எடுக்கவும். தடுப்பூசி போட்ட இக்காலத்தில் குழந்தைகள் குறைவாகவே சாப்பிடுவார்கள். இதற்காக பயம் வேண்டாம். அது நார்மல்தான். கொஞ்சம் அதிக கவனத்தை குழந்தைகள் மேல் வையுங்கள். 
Tags:    

Similar News