செய்திகள்
வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறினார் டிரம்ப்

’அமெரிக்க அதிபராக செயல்பட்டது பெருமையளிக்கிறது’ - டொனால்டு டிரம்ப்

Published On 2021-01-20 14:42 GMT   |   Update On 2021-01-20 14:42 GMT
அமெரிக்காவின் 45-வது அதிபராக செயல்பட்டது பெருமையளிக்கிறது என டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார்.

தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபரான
மைக் பென்ஸ் தோல்வியடைந்தனர்.

அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், துணை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கமலா ஹாரிஸ் இன்று பதவியேற்க உள்ளனர். அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்திய நேரப்படி இரவு 10 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. பதவியேற்பு விழாவை தொடர்ந்து ஜோ பைடன் அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளைமாளிகையில் நாளை குடியேற உள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் அலுவலகம் மற்றும் வீடாக செயல்பட்டு வந்த வெள்ளைமாளிகையில் இருந்து தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று வெளியேறினார்.

வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறும் போது டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியார்களிடம் டிரம்ப் கூறியதாவது:-

அமெரிக்காவின் 45 ஆவது அதிபராக செயல்பட்டது பெருமையளிக்கிறது. இது என் வாழ்நாளில் மிகப்பெரிய கௌரவும்.

என்றார்.

அதன்பின்னர் வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறிய டிரம்ப் மெரிலேண்ட் பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் நடைபெற்ற பிரிவு உபசார நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் டிரம்ப் பேசுகையில்,

நான் உங்களுக்காக எப்போழுதும் போராடுவேன். நான் எப்போதும் பார்த்துக்கொண்டும், கவனித்துக்கொண்டும் இருப்பேன். இந்த நாட்டின் எதிர்காலம் இதை விட சிறப்பாக இருக்க முடியாது.

அடுத்து வரும் நிர்வாகத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என நினைக்கிறேன்.

மிகவும் சிறப்பாக செயல்பட அவர்களுக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. துணை அதிபர் மைக் பென்ஸ், அவரது மனைவி ஹரன் பென்ஸ் ஆகியோருக்கும் காங்கிரசுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நீங்கள் மிகவும் அருமையான மக்கள். இது மிகச்சிறந்த நாடு. உங்களின் அதிபராக செயல்பட்டது எனக்கு பெருமையளிக்கிறது.

என்றார்.

இந்த பிரிவு உபசார நிகழ்ச்சிக்கு பின்னர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் புளோரிடாவுக்கு தனி விமானம் மூலம் சென்றனர்.
Tags:    

Similar News