செய்திகள்
திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இன்று முதல் இலவச லட்டு வினியோகம்

திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இன்று முதல் இலவச லட்டு வினியோகம்

Published On 2020-01-20 02:00 GMT   |   Update On 2020-01-20 02:00 GMT
இந்த ஆண்டு (2020) முதல் புத்தாண்டு பரிசாக ஏழுமலையானை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் இன்று (திங்கட்கிழமை) முதல் இலவசமாக லட்டு வழங்கப்படுகிறது.
திருமலா :

உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு கட்டணத்தில் தரிசனத்துக்கு செல்பவர்கள், நடை பயணமாக செல்பவர்களுக்கு என குறிப்பிட்ட எண்ணிக்கையில் இலவசமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக கமிட்டி இந்த ஆண்டு (2020) முதல் புத்தாண்டு பரிசாக ஏழுமலையானை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் 175 கிராம் எடையுள்ள லட்டை இலவசமாக வழங்க முடிவு செய்து உள்ளது.

அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் திருப்பதி கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக லட்டு வழங்கப்படுகிறது. இதற்காக இந்த எடையில் கோவில் நிர்வாகம் தினசரி 3 லட்சம் முதல் 3.75 லட்சம் லட்டுகளை தயாரிக்க உள்ளது.

கூடுதலாக லட்டு வேண்டுவோர் ரூ.50 கட்டணத்தில் பெற்றுக்கொள்ளும் முறை இன்றும் முதல் அமலுக்கு வருகிறது. பல்வேறு கட்டணங்களை செலுத்தி கூடுதல் லட்டு பெற்றுக்கொள்ளும் வசதி இன்று (திங்கட்கிழமை) முதல் ரத்து செய்யப்படுகிறது.
Tags:    

Similar News