செய்திகள்

பா.ஜ.க.,காங்கிரஸ் இரு கட்சிகளுமே இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளன - மாயாவதி குற்றச்சாட்டு

Published On 2018-11-05 07:36 GMT   |   Update On 2018-11-05 07:38 GMT
பா.ஜ.க.-காங்கிரஸ் இரு கட்சிகளுமே இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளன என்று பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். #Mayawati #BJP #Congress

ராய்ப்பூர்:

பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கூட்டணி வெற்றி பெற்றால் ஆதிவாசி மக்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், மைனாரிட்டி சமூகத்தினர், தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவருடைய உரிமையும் பாதுகாக்கப்படும். அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த நாங்கள் தீவிரமாக உழைப்போம்.

காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் ஆரம்பத்தில் இருந்தே ஜாதி மனப்பான்மையுடன் செயல்படுகின்றது. காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக ஆட்சியில் இருந்துள்ளது. இப்போது பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கிறது. இந்த இரு கட்சிகளுமே இட ஒதுக்கீட்டை பலவீனமாக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.

 


 

இடஒதுக்கீட்டை கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் செய்துவிட வேண்டும் என்பது தான் அவர்களின் திட்டமாகும். எனவே அதற்கான இடையூறுகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்கள்.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் போன்றவர்கள் தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு பெற்று விடக் கூடாது என்பதிலும் அவர்கள் முனைப்பாக இருக்கிறார்கள்.

இந்த மக்களின் உரிமைகளை காப்பாற்றவே நாங்கள் போராடுகிறோம்.

இவ்வாறு மாயாவதி பேசினார். #Mayawati #BJP #Congress

Tags:    

Similar News