ஆன்மிகம்
முருகன்

சங்கு, சக்கரத்தில் முருகன்

Published On 2020-11-06 07:57 GMT   |   Update On 2020-11-06 07:57 GMT
மச்சபுரீஸ்வரர் கோவிலில் பன்னிரண்டு திருக்கரங்களுடன் அருளும் இந்த முருகப்பெருமான், மகாவிஷ்ணுவைப் போல இரண்டு கரங்களில் சங்கு, சக்கரத்தை தாங்கியபடி இருக்கிறார்.
மச்சபுரீஸ்வரர் கோவிலில் முருகப்பெருமானுக்கு தனி சன்னிதி இருக்கிறது. முன்பகுதியில் மூன்று முகம், பின்பகுதியில் 3 முகம் என ஆறுமுகப் பெருமானாக, முருகன் வீற்றிருக்கிறார்.

பன்னிரண்டு திருக்கரங்களுடன் அருளும் இந்த முருகப்பெருமான், மகாவிஷ்ணுவைப் போல இரண்டு கரங்களில் சங்கு, சக்கரத்தை தாங்கியபடி இருக்கிறார். இந்த ஆறுமுகப்பெருமானுடன் வள்ளி-தெய்வானை தேவியரும் வீற்றிருக்கிறார்கள்.

இங்கு ‘சத்ரு சம்ஹார பூஜை’ செய்வது நல்லது. பொதுவாக சிவன் கோவிலின் கருவறை பின்புறம் உள்ள கோஷ்டத்தில் லிங்கோத்பவர் இருப்பார். இக்கோவிலில் அந்த இடத்தில் நின்ற கோலத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவை சங்கு, சக்கர முருகன் பார்க்கிறார். இது இக்கோவிலின் தனிச்சிறப்பு ஆகும்.
Tags:    

Similar News