ஆட்டோமொபைல்
ஸ்கோடா பேபியா

புதிய தலைமுறை ஸ்கோடா பேபியா அறிமுகம்

Published On 2021-05-06 08:07 GMT   |   Update On 2021-05-06 08:07 GMT
ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புது பேபியா மாடல் பல்வேறு பாடி ஸ்டைல்களை கொண்டிருக்கிறது.


செக் குடியரசை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் நான்காவது தலைமுறை பேபியா மாடலை அறிமுகம் செய்தது. புது மாடல் தலைசிறந்த பாதுகாப்பு, அதிநவீன தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என ஸ்கோடா தெரிவித்து இருக்கிறது. 

ஸ்டான்டர்டு மாடல் தவிர, புது பேபியா காம்பி, மான்ட் கர்லோ, காம்பி மான்ட் கர்லோ, பிளாக் எடிஷன் காம்பி ஸ்கவுட்லைன், க்ளெவர் மற்றும் காம்பி க்ளெவர் போன்ற பாடி ஸ்டைல்களில் கிடைக்கிறது. அறிமுகத்தின் போது புது பேபியா ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும்.



புது பேபியா மாடல் வோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB-A0 பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இந்த மாடல் பின்புற இருக்கை பயனர்களுக்கு அதிக இடவசதியை வழங்குகிறது. உள்புறம் புதிய LED ஆம்பியன்ட் லைட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது. முதல்முறையாக பேபியா மாடலில் ஆப்ஷனல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது.

புது தலைமுறை ஸ்கோடா பேபியா மாடல் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் MPI EVO என்ஜின் இருவித டியூனிங்கிலும், 3 சிலிண்டர் TSI EVO என்ஜின் இருவித டியூனிங்கிலும், 1.5 லிட்டர் TSI 4 சிலிண்டர் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 
Tags:    

Similar News