ஆன்மிகம்
ரகசிய பாதாள அறையில் இருந்து எடுக்கப்பட்ட சிலைகள், பூஜை பொருட்களை படத்தில் காணலாம்.

பழமையான அகத்தீசுவரர் கோவிலில் பாதாள அறையில் சாமி சிலைகள்

Published On 2021-11-25 05:40 GMT   |   Update On 2021-11-25 05:40 GMT
பழமையான அகத்தீசுவரர் கோவிலின் பாதாள ரகசிய அறையை பூட்டை உடைத்து திறந்து, அதன் உள்ளே இருந்த சிலைகளை அதிகாரிகள் வெளியே எடுத்தனர். அந்த நேரத்தில் கோவிலின் வெளியே பக்தர்கள் திரண்டதால் பரபரப்பாக காணப்பட்டது.
மதுரை மாவட்டம் திருச்சுனை கிராமத்தில் பழமையான அகத்தீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகளை மதுரை மண்டல அறநிலையத்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இதற்காக கோவிலை ஆய்வு செய்தபோது உற்சவர்கள் சிலைகள் இல்லாமல் இருந்ததும், கோவில் கருவறை அருகே ரகசிய பாதாள அறை ஒன்று இருந்ததும் தெரியவந்தது.

இந்த அறை பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து அதிகாரிகள் கோவிலின் ரகசிய அறை பூட்டை உடைத்து திறந்தனர். அங்கு பழமை வாய்ந்த மூஷிக வாகன விநாயகர் மற்றும் சண்டிகேசுவரர், அம்மன் சிலைகளும், சூலாயுதம், விளக்கு உள்ளிட்ட பூஜை பொருட்களும் அங்கிருந்தன. அவை எடுக்கப்பட்டு வெளியே கொண்டு வரப்பட்டன.

கோவிலின் ரகசிய பாதாள அறை திறக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி பக்தர்கள் கோவில் முன் திரண்டனர். ஆனால் பாதுகாப்பு கருதி அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
Tags:    

Similar News