உள்ளூர் செய்திகள்
முருகன்குறிச்சியில் உள்ள ஒரு பள்ளியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட காட்சி.

நெல்லையில் பிளஸ்-2 தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி

Published On 2022-05-04 10:50 GMT   |   Update On 2022-05-04 10:50 GMT
நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு மொத்தம் 72 மையங்களில் நாளை முதல் நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.
நெல்லை:

 தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும்  பிளஸ்-2  வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு சீராக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

மாதாந்திர தேர்வு, காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டது.

இந்நிலையில்  இந்த ஆண்டு பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்கு–கிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு தொடங்குகிறது.

இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் தேர்வுக்கான வினாத்தாள்கள் 2 நாட்களுக்கு முன்னர் வினாத்தாள் பாதுகாப்பு மையங்களுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு மொத்தம் 72 மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வை 21 ஆயிரத்து 694 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இதில் 11 ஆயிரத்து 812 மாணவி களும், 9 ஆயிரத்து 882 மாணவர்களும் அடங்குவர்.

இதேபோல் பிளஸ்-1 தேர்வை  22 ஆயிரத்து 533 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதில் 11 ஆயிரத்து 902 மாணவி களும், 10 ஆயிரத்து 831 மாணவர்களும் அடங்குவர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 91 மையங்களில் நடைபெற உள்ளது. இதில் 13 ஆயிரத்து 127 ஆண்களும், 12 ஆயிரத்து 842 மாணவிகளும் என மொத்தம் 25 ஆயிரத்து 969 பேர் எழுத உள்ளனர்.

நாளை பிளஸ்-2 தேர்வு தொடங்குவதையொட்டி இன்று நெல்லை மாநகர பகுதியில் உள்ள பெரும்பாலான தேர்வு மையங்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி ஆய்வு செய்தார்.

மாநகராட்சி கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை சார்பில் தேர்வு அறைகள், பள்ளி வளாகங்கள் உள்ளிட்டவற்றை கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.

தச்சை மண்டலத்திற்கு உட்பட்ட முருகன் குறிச்சியில் உள்ள ஒரு பள்ளியில் சுகாதார அலுவலர் இளங்கோ முன்னிலையில் தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்து கிருமிநாசினி தெளித்தனர்.

இதேபோல் மாநகரப் பகுதி மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேர்வு மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டி ருப்பதை அதிகாரிகள் நேரில் சென்று உறுதி செய்தனர்.

மேலும் அனைத்து மையங்களிலும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவை முறையாக இருப்பதையும் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

Tags:    

Similar News