தொழில்நுட்பம்
கேலக்ஸி இசட் ஃப்ளிப் ரென்டர்

இணையத்தில் வெளியான கேலக்ஸி இசட் ஃப்ளிப் புதிய புகைப்படங்கள்

Published On 2020-02-01 04:15 GMT   |   Update On 2020-02-01 02:30 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ஃப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.



சாம்சங் நிறுவனத்தின் 2020 கேலக்ஸி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. இந்நிலையில், கேலக்ஸி இசட் ஃப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஃப்ளிப் ஸ்மார்ட்போனின் வெளிப்புற டிஸ்ப்ளே ஃபோக்கஸ் டிஸ்ப்ளே என அழைக்கப்படும் என்றும் ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் இதன் டிஸ்ப்ளே 22:9 ரேஷியோ கொண்டிருக்கும் என தெரிகிறது.

இத்துடன் கேலக்ஸி ஃப்ளிப் ஸ்மார்ட்போனில் 12 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. முந்தைய மாடலை போன்று புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் 5ஜி வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



டிஸ்ப்ளே அளவுகளை பொருத்தவரை ஸ்மார்ட்போனின் முன்புறம் 1.05 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 22:9 ரேஷியோ டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில் 15 வாட் வையர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வயர்லெஸ் முறையில் 12 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.

கேலக்ஸி இசட் ஃப்ளிப் ஸ்மார்ட்போன் 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என்றும் இது 925 எம்.ஏ.ஹெச். மற்றும் 2375 எம்.ஏ.ஹெச். என இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. 

முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி இசட் ஃப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மிரர் பிளாக் மற்றும் பர்ப்பிள் நிறங்களில் அறிமுகமாகும் என்றும் இதில் பிரிஸ்மேடிக் எஃபெக்ட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

புகைப்படம் நன்றி: Ishan Agrawal
Tags:    

Similar News