செய்திகள்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி

டி20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 50 வெற்றி: ஆப்கானிஸ்தான் அணி சாதனை

Published On 2019-09-15 12:55 GMT   |   Update On 2019-09-15 12:55 GMT
ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, குறைந்த இன்னிங்சில் 50 வெற்றியை ருசித்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது.
வங்காளதேசத்தில் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிப்பாப்வே அணிகளுக்கு இடையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது.

இதன்மூலம் குறைவான போட்டிகளில் 50 வெற்றியை பெற்ற முதல் அணி என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் படைத்துள்ளது.



நேற்றைய வெற்றியின் மூலம் 72 போட்டிகளில் 50 வெற்றிகளை வெற்று சாதனைப் படைத்துள்ளது. தென்ஆப்பிரிக்கா 83 போட்டிகளிலும், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் 84 போட்டிகளிலும், இலங்கை 92 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா 97 போட்டிகளிலும், நியூசிலாந்து 99 போட்டிகளிலும், இங்கிலாந்து 105 போட்டிகளிலும் 50 வெற்றிகளை பெற்றன.
Tags:    

Similar News